பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு, பரிசு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது. இதன்படி 2012 - 13 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பெற்று பயன் பெறலாம்.
பரிசு தொகை பெறவுள்ள மாணவரின் தாய், தந்தை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றமைக்கான மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், முன்னாள் படைவீரர் படைப்பணி சான்று மற்றும் அடை யாள அட்டை நகல் இணைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை, திருவள்ளூர் ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.