அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்தும் வகையில், பள்ளிகளை தொழிற்சாலைகள் தத்தெடுப்பதற்கு, வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களில், 94 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கிராமப்புறங்களில் மட்டும், 52 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு தேவையான ஆய்வுக்கூடங் களும் இல்லை. இதனால், மாணவர்கள், 35 சதவீதம் என்ற அளவில் கூட, மதிப்பெண்களை எடுக்க முடியாமல் தோல்வி அடைகின்றனர்.
கடந்தாண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாவட்டத்தில் உள்ள 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு பள்ளிகூட 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர் மாதத்திலேயே அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். அதன்பிறகு, திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடங்களும் நடத்தப்படவில்லை. திருப்புத் தேர்வுகளும் வைக்கவில்லை. இதற்கு, ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருப்பதும், கிராமங்களில் பணிபுரிய, ஆசிரியர்கள் தயங்குவதும் தான் காரணம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து அரசு பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்துதல், காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், அரசு பள்ளிகளை, தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு தத்து வழங்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 16 அரசு பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிறுவனங்கள் மூலம், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, சம்பளமும் வழங்கப்படுகின்றன" என்றார்.
அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும், தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தியை அலுவலக தொலைபேசி 044 - 2722 2128, அலைபேசி 73730 02671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.