Pages

Tuesday, July 30, 2013

5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவா?

உடனடியாக மாணவர் என்னிக்கை 5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும், காலம் செல்லச் செல்ல 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும் முடிவெடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணியினை கல்வித்துறை முடுக்கிவிட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.

ஒரு வேளை இச்செய்தி உண்மையானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை தன்னுடைய அதிர்ப்தியை பதிவு செய்கிறது. இதனால் பல ஆசிரியர்கள் இடம் மாறுவார்கள் என்பதைவிட் 1கி.மீ. சுற்றளவில் ஆரம்பப்பள்ளிக்ள அமைந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை கேள்வி குறியாகி விடும். மாணவர்களை அருகாமை பள்ளிகளில் இணைப்பதால் மாணவர்கள் தொடர்ந்து அருகாமை பள்ளிகளுக்கு வருவார்களா? மேலும் இடைநிற்றலை அறவே ஒழிக்க வேண்டும் என போராடி வரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சி விரயமாகிவிடும். பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் நகரங்களை நோக்கி இடம் பெயரும் மக்களை இது மேலும் ஊக்குவிக்கும் செயலாக அமைந்து விடும்.
பல ஊர்களில் புற்றீசல் போல அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாமல் அரசு பள்ளிகளை மூடுவதால் எதிர்மறை விளைவுகளைதான் ஏற்படுத்தும். பள்ளிகளுக்கு மூடுவிழா செய்யாமல் மாற்று வழி என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும். காமராஜர் காலத்தில் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன என்பதை வரலாறு பேசுகிறது. ஜெயலலிதா காலத்தில் பல் பள்ளிகள் மூடப்பட்டன என்ற அவப்பெயரை முதல்வருக்கு ஏற்படுத்தமாட்டார்கள் என்றே நம்புகிறேன். மாற்று வழி யோசிப்போம்! மகத்தான கல்வி புரட்சி காண்போம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.