Pages

Tuesday, July 30, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணி 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் பரிசீலனை செய்யப்படாததை கண்டித்து மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த, தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, ஜூலை 22 ல் அரசு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யவில்லை. இதை கண்டித்து 3 கட்ட போராட்டம் நடத்த தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.முதல்கட்டமாக ஆக.7ல் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக செப்., 14 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 
மூன்றாம் கட்ட போராட்டமாக தொடக்க கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலை ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டுப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியில் ஆங்கிலவழிக்கல்வி திணிப்பை கைவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது, என மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்துள்ளா

1 comment:

  1. neenga kattam kattamma nadathi, enga(secondary grade teachers)life-a spoil pandrathu thaan michaam.
    by sagum neilaiyil secondary grade teachers

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.