Pages

Monday, April 15, 2013

இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலையை விளக்குகிறார், SSTA சங்கத்தின் பொது செயலாளர்

இது குறித்து SSTA சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ராபர்ட் கூறுகையில், நீண்ட போராட்டதிற்க்குப் பின்பு வெற்றிக்கனி கண்ணில் தெரிகிறது. நான்கு ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த நமது பணிமாறுதல் வழக்கு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருகிறது. இதுவரை நமது வழக்கை கண்டுகொள்ளாத அரசு தற்போது அடுத்த  பணி நியமனதிற்க்காக வழக்கு விசாரணையில் ஆஜரானது. SSTA இயக்கத்தின் சார்பில் முன்னர்  பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் I.A NO. 1617/2013 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
நமது இயக்கத்தின் சார்பில் உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு.K.ராமமூர்த்தி (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) மற்றும் அவருடைய புதல்வி திருமதி.சோபா அவர்களும், அவர்களது உதவி வழக்கறிஞர்கள் விசாரணைக்கு வந்திருந்தனர். வழக்கு 05/04/2013 அன்று காலை 7ஆம் எண் கோர்டில் 3ஆவது வரிசையில் வழக்கு விசாரணை காலை 10.45 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் ஒவ்வொரு வழக்கறிஞ்சர்களும்  அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். அனைத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். வழக்கில் அரசு தாக்கல் செய்த அவிடவிடில் மாவட்ட பணிமாறுதல் பற்றி ஒரு வார்த்தை கூட, ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. நம்மைப்பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை.இருப்பினும் நமது மூத்த  வழக்கறிஞர் நமக்கு  தெளிவான உத்தரவினை பெற்றுத்தருவார். முடிக்கவே முடியாது!!! ஐந்தாண்டு காலத்தில் அதுவாகவே மாறுதல் வந்துவிடும் என்று கூறியதை எல்லாம் தகர்த்து இறுதி விசாரணையை நெருங்கி உள்ளோம். விரைவாக வெற்றி...

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.