Pages

Tuesday, April 30, 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீடு, "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE)ஆக மீண்டும் இன்று விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்

"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை  படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.
அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் நேற்று (29.04.2013) விசாரணைக்கு வந்தது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இடைக்கால தடை  உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று விசாரிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.