"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.
அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் நேற்று (29.04.2013) விசாரணைக்கு வந்ததுது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால தடை உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர். மேலும் இந்த இடைக்கால தடையானது இறுதி தீர்ப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் இரட்டைப் பட்டம் முடித்தவர்களையும் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க விரைவில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடும் என்றும், அவ்வாறு உத்தரவு வரும் பட்சத்தில் அதை அப்படியே செயல்படுத்த தொடக்கக் கல்வி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக உள்ளதாக தகவ்வல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.