Pages

Sunday, April 21, 2013

நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

தற்போதுள்ள காலகட்டத்தில் நடைப்பயிற்சி முக்கியமாகி நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று. கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்.....
• நடைபயிற்சி செய்யும் போது நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.

• நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும், கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..

• கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

• உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும், உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

• ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடக்க கூடாது. வேகமாக நடக்க வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

• நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.

• இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.