Pages

Tuesday, April 9, 2013

சாலையோரத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம்

மண்ணரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, தன்னுடைய சொந்த பணத்தில், ஒருவர், கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார்.
அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், அப்பள்ளி மாணவ, மாணவியர், ரோட்டோரத்தில், மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர்.

திருப்பூர், மண்ணரை பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 145 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதுமான வகுப்பறை இல்லாததால், பாதுகாப்பு இல்லாமல், சாலையோரத்தில், மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். தேர்வு நேரங்களில், மாணவர்கள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதும் அவலமும் நீடித்து வருகிறது.

பலத்த மழை பெய்தால், பள்ளிச்சுவர் இடிந்து விழக்கூடிய அபாயமும் உள்ளது. மதிய நேரம் உணவருந்த மாணவர்கள், சாலையோரமுள்ள இடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், சாலையோரம் இப்பள்ளி இயங்கி வருவது, மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு, கேள்விக்குறியாக உள்ளது.

இப்பள்ளியின் அவல நிலையை பார்த்து, சமூக ஆர்வலர் ஒருவர், தன்னுடைய செலவில் இடம் வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறையை, கிருஷ்ணசாமி-புஷ்பாவதி மாநகராட்சி நினைவு பள்ளி என்ற பெயரில், கட்டிக் கொடுத்துள்ளார். வகுப்பறையை கட்டி முடித்து 10 மாதங்களாகியும் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதனால், மாணவ, மாணவியரின் மரத்தடி கல்வி தொடர்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.