Pages

Wednesday, April 17, 2013

ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர்! கேள்விக்குறியாகும் கல்வி...

180 மாணவர்களைக்கொண்ட ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது சேந்தமங்கலம் கிராமம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்த ஊரில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி, ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் நடத்துவதால் மற்ற வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

எந்த பாதுகாப்பும் இன்றி, முட்செடிகளுக்கு மத்தியில் பள்ளிக் கட்டடம் அமைந்துள்ளது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வகுப்பறைகளுக்கு வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக பள்ளி செலலும் குழந்தைகளின் உயிருக்கு எந்த உத்தரவாமும் இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியின் இந்த அவலநிலை குறித்து, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி கவுரியிடம் கேட்டபோது, இந்த பகுதியில் இதேபோன்று 5 பள்ளிகள் ஒரெயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவதாக கூறினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஆதி திராவிடர் நல செயலாளர் ஆகியோருக்கு தெரிவித்துவிட்டதாகவும், இதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.