Pages

Wednesday, April 17, 2013

பெண்கள் உயர்ந்த பதவி வகித்து சொந்த காலில் நிற்க வேண்டும்

"ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவி வகித்து சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்," என ஐ.ஜி., சைலேந்திரபாபு கல்லூரி விழாவில் பேசினார்.
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. 205 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசியதாவது:

"கல்வி என்பது மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவி வகித்து சொந்தக்காலில் நிற்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம். மாணவிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நாளிதழ்களை படித்து உலக அறிவையும், பொது அறிவையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.