Pages

Tuesday, April 9, 2013

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

அல்ஜீப்ரா குறித்து பயமும், கவலையும் கொண்டவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. டிராகன் பாக்ஸ் என்ற ஒரு கருவியின் மூலம், அல்ஜீப்ராவை எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இக்கற்றல் முறையில், ஒவ்வொன்றும், படமாக தொடங்குகிறது. மின்மினிப் பூச்சிகள், விநோத ஜந்துக்கள், பூதங்கள் மற்றும் தாயக்கட்டை உள்ளிட்ட உருவங்கள் இந்த விளையாட்டு கற்றலில் இடம் பெற்றிருக்கும். நீங்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது, மேலே குறிப்பிட்ட உருவங்களில் ஒவ்வொன்றும், கணித மாறுபாடுகளாகவும், எழுத்துக்களாகவும், எண்களாகவும் மாற்றமடையும்.

பாடத்தை நம்பியிராமல், அல்ஜீப்ராவின் விதிமுறைகளை, இந்த புதிய முறையின் மூலமாக, படிப்படியாக கற்றுக்கொள்ளலாம். இதில், பெற்றோர்களும் பங்கு கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன், K-12 கரிகுலத்தை வழங்குகிறது. இதை, ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில், ஏறக்குறைய ரூ.350க்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த டிராகன் பாக்ஸ், IOS, Android devices and Mac version, tablets and desktops போன்றவைகளில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.