Pages

Tuesday, April 9, 2013

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது.
இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.

கடந்த 2009-10ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பலர், சுயமுகவரியிட்ட கடிதத்தை ஒப்படைக்காததால், பலருக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை. அவை மதுரை அரசு தேர்வுகள் துறை துணைஇயக்குனர் அலுவலகத்தில் உள்ளன.

விதிப்படி தேர்வு முடிவுகள் வெளியான, 2 ஆண்டுகளில் அவை அழிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு மாதத்திற்குள் ரூ.30 ஸ்டாம்ப் ஒட்டிய தபால் உறையை வழங்கி, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என, துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.