Pages

Sunday, April 14, 2013

சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட் மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை, வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முறை இக்கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., அதிகார வட்டாரங்கள் இதுகுறித்து சில தகவல்களைக் கூறினர். அதாவது, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு முறை(Continuous and Comprehensive Evaluation - CCE) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் படிப்பில் அலட்சியம் காட்டத் தொடங்கி விட்டனர். எனவே, மேற்கண்ட தேர்வுகளின் Attempt எண்ணிக்கையை குறைப்பதின் மூலமாக, அவர்களின் இந்த அலட்சிய மனப்போக்கை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அது.

CCE முறையானது, மாணவர்களின் பாரத்தை குறைத்து, வகுப்புகள் மீண்டும் மீண்டும் தொடரும் வாய்ப்புகளை தவிர்ப்பது ஆகிய நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டது. இந்த புதிய மாற்றங்கள், இந்த 2013-14ம் கல்வியாண்டை தொடங்கும் மாணவர்களுக்கானது. அதேசமயம், 2011-12 கல்வியாண்டு வரை, வாரியத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. இந்த மாணவர்கள், ஜுலை மாதம், சி.பி.எஸ்.இ., வாரியம் அல்லது பள்ளி நடத்தும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

10ம் வகுப்பு தேர்வையெழுதி, மொத்தமாக 5 பாடங்களிலோ அல்லது ஏதேனுமொரு பாடத்திலோ, படிப்பு திட்டத்தின்படி, ஸ்காலஸ்டிக் பகுதி ஏ-வின் கீழ், E1 அல்லது E2 கிரேடு பெற்ற மாணவர்கள், அவர்களின் மதிப்பெண்களை, ஏதேனுமொரு பாடத்திலோ அல்லது அனைத்து 5 பாடங்களிலுமோ உயர்த்திக்கொள்ள தகுதியுடையவர்கள். இந்த மாணவர்கள், அதே ஆண்டு, ஜுலை மாதத்தில், வாரியம் நடத்தும் Improvement தேர்வில் பங்கு பெறலாம்.

மாணவர்களுக்கு, பாடவாரியான செயல்பாட்டு ஸ்டேட்மென்ட் வழங்கப்படும். Improvement மற்றும் Compartment தேர்வுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டதால், இனிமேல், முதல் நாளில் இருந்தே, தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. அலட்சியத்திற்கு இடமில்லை.

புதிய முறையின்படி வாய்ப்புகள்

10 மற்றும் 12ம் வகுப்பிற்கான Improvement தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 1ஆக குறைப்பு.

12ம் வகுப்பிற்கான Compartment தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 3ஆக குறைப்பு

10ம் வகுப்பிற்கான Compartment தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 4ஆக குறைப்பு.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.