Pages

Thursday, April 18, 2013

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு

கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் கோட்டூர்புரம் நூலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "அறிவுசார் பூங்கா" கட்டடத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கட்டுவதற்கு பதிலாக, தரமணியில் கட்டுவது குறித்து, பள்ளி கல்வி துறை, ஆலோசித்து வருகிறது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களை இடித்தால், பழமை வாய்ந்த பல கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த, 2012-13ம் ஆண்டு, பட்ஜெட் கூட்ட தொடரில், "சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வி துறை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டப்படும்" என, அறிவிக்கப்பட்டது. பின், சென்னை, கோட்டூர்புரத்தில் இயங்கி வரும், அண்ணா நூற்றாண்டு நூலகமும், இந்த கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.