பிளஸ் 2 கணிதத் தேர்வு புளூ பிரின்ட் அடிப்படையில் இருந்ததால் விடைத்தாள் மதிப்பீட்டில் இலவச மதிப்பெண் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசுத் தேர்வுத் துறை கூறியுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:பிளஸ்-2 கணித வினாத்தாளில் 13-ம் வினாவில் ஒரு சிறு அச்சுப்பிழையின் காரணமாக 4 மாற்று விடைகளில் 1 சரியான விடைக்குப் பதிலாக, இரு சரியான விடைகள் தீர்வாக அமைந்துள்ளபடியால் இரண்டு விடைகளுக்கும் மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டது.இதேபோல், ஆங்கில வழி வினாத்தாளில் குறியீடு சரியாக இல்லை என்பதற்காக, அந்த வினாவிற்கு தீர்வு கண்டிருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படலாம் என மதிப்பீட்டு முறையில் சேர்க்கப்பட்டது.இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக பாடநூல் குழுவின் அறிக்கையை தேர்வுத் துறை பெற்றது. ஆனால், புளூ பிரின்டின்படியே கேள்வித்தாள் அமைந்திருந்ததாக இந்தக் குழு தெரிவித்தது. இதை தேர்வுத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதும், அதை ஏற்று வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.நியாயமான எதிர்பார்ப்புகளுடன் உள்ள மாணவர்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. இலவச மதிப்பெண் இல்லை என்பதால் மேல்படிப்புக்கான மாணவர்களின் ரேங்க் பாதிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பிளஸ்-2 கணித வினாத்தாள் புளூ பிரின்ட் படி இருந்ததால், இலவசமாக எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.