Pages

Tuesday, April 30, 2013

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

1 comment:

  1. அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டாலும்,
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உடனே
    அறிவிக்கப்படுவதில்லை.அறிவித்தாலும்[அரசு ஒப்புதல் கொடுத்தாலும்] , செயல்படுத்துவதற்கு சொந்த நிதிஆதாரம் இல்லை என, போக்குவரத்துக்கழகங்கள் கைவிரிக்கின்றன .

    சமூகத்தின் எந்த பிரச்சனைக்கும், {ஜாதி, மத, குடிநீர், சுடுகாடு----- உட்பட எந்த பிரச்சனைக்கும்.} முதல்கல்லடியும் எமக்குத்தான். தீவைப்பும் எமக்குத்தான். .ஆனால் அகவிலைப்படி உயர்விலாகட்டும், ஊதிய ஒப்பந்தத்திலாகட்டும் ,ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணிக்கொடை, விடுமுறை சம்பளம், வருங்கால வைப்பு நிதி,ஓய்வூதியம் -{ http://ttsftnstc.blogspot.in/2013/06/blog-post_25.html }போன்றவற்றிலாகட்டும் முதல்பழிகடாவும் நாங்கள்தான் . எமக்கு எப்போது விடியும்???.

    அன்புடன்
    Kandhpraba { www.facebook.com/kandh.praba?ref=tn_tnmn }

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.