Pages

Tuesday, April 30, 2013

கோடைவிடுமுறையில் வகுப்பு: கண்டித்து ஆசிரியர்கள் மே 2 உண்ணாவிரதம் - நாளிதழ் செய்தி

கோடை விடுமுறையை ரத்து செய்து பாடம் நடத்தும் உத்தரவைக் கண்டித்து மே 2ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நாகர்கோவிலில் இக்கூட்டமைப்பின் கூட்டம் அமைப்பாளர் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இணை அமைப்பாளர் ஆன்றனி ராஜ் முன்னிலை வகித்தார்.தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலக மாவட்டத் தலைவர் டி. ஜோஸ் டைட்டஸ், செயலாளர் சுரேந்திரன், கல்வி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணிய ஐயர், பொருளாளர் என்.எஸ். பகவதி, தமிழாசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் விக்ரமன், மாவட்டச் செயலாளர் ஜான் ஜென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோடைவிடுமுறையை ரத்து செய்து பாடம் நடத்த தொடக்கக் கல்வித்துறையில் இருந்து ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கும் அவப் பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.எனவே கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி நாகர்கோவிலில் மே 2ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.