Pages

Monday, April 1, 2013

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் தனியாரால் இடம்,கட்டட வசதிகள் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் அரசு கொடுக்கும் நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கு நிதியுதவி இல்லாமல் நலிவுற்று அடிப்படை வசதி இல்லாமல் செயல்படுகிறது.

2007ம் ஆண்டு வரை அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலிருந்து ஒரு சதவிகிதம் பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பு தொகையும் வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர்,கழிப்பறை,காற்றோட்டமான வகுப்பறை வசதிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பள்ளிகள் உள்ள இடத்தில் அரசு பள்ளிகளும் தொடங்கப்படாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படிப்பதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. Aided school posting ku panam vangurathu pathi enna solrathu

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.