Pages

Saturday, April 27, 2013

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 43 மழலையர் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இப்பள்ளிகளில், கட்டாய கல்விச்சட்டம் வகுத்துள்ள விதிமுறைப்படி போதிய வசதிகள் இல்லாததும், அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்காமல் இயங்குவதும் தெரியவந்துள்ளது. எனவே வரும் ஜூன் மாதம் 1-ம் தேதிக்குள் போதிய கட்டமைப்பு வசதிகளை செய்து அங்கீகாரம் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அங்கீகாரம் பெறத்தவறினால் பள்ளிகள் மூடி சீல் வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.