Pages

Sunday, March 17, 2013

இன்னும் எத்தனை வழிகளில் தான் ஏமாற போகிறார்கள் CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்

01.04.2003 க்குப் பிறகு CPS திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.பல்வேறு குறைபாடுகள் பல்வேறு விதமாக தெரிய வருகிறது. அதில் ஒன்றாக 01.04.2003-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுபவர்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
CPS திட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்கபட்டவர்களுக்கு ,இது வரை பணிநீட்டிப்பு காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.அதற்கு காரணம் பணி நீட்டிப்பு காலத்தில் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு பணி நீட்டிப்பு காலத்திற்குரிய ஊதியம் தொகுத்து கணக்கிட்டு வழங்கப்படும்.cps திட்டத்தில் உள்ளவர்கள் இதுவரை ஓய்வூதியம் கணக்கிடும் முறை முறையாக வகுக்கப்படாததால் ஓய்வூதியம் பணிநீட்டிப்பு காலத்திற்கு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.இதனை போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய மின்றி பணி புரிந்து வருகின்றன.
தொடர்புக்கு-engelsdgl@gmail.com / teamcps2012@gmail.com 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.