Pages

Wednesday, March 13, 2013

ஆசிரியர்கள் இடையே பனிப்போர்: ஆய்வு மாணவி அலைக்கழிப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலை தமிழ்துறை தலைவருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள பனிப்போரால், பிஎச்.டி., ஆய்வுக்கு அனுமதி மறுப்பதாக, மதுரை மாணவி பத்ரகாளி, தர்ணாவில் ஈடுபட்டார்.
அவர் கூறியதாவது: கடந்த 2003 ல், எம்.பில்., முடித்தேன். கடந்த 2010 ல், அழகப்பா பல்கலை தமிழ்துறையில், பிஎச்.டி., ஆய்வுக்காக விண்ணப்பித்தேன். நுழைவுத்தேர்வு, எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, துறை தலைவர் பாண்டி நெறியாளராக செயல்பட சம்மதித்தார். ஒன்றரை ஆண்டு கழித்து, "என்னிடம் இடம் இல்லை," என்றார். அதன் பின், உதவி பேராசிரியை சுதாவை அணுகினேன். அவர் அப்போது ஒப்புக்கொண்டார். ஆறு மாதம் கழித்து, "தொல்காப்பிய பொருளதிகார மரபியலில், இயங்கியல் கோட்பாடு" குறித்த ஆய்வு எனக்கு தெரியாது,&'&' என மறுத்து விட்டார்.

இறுதியாக, உதவி பேராசிரியர் பா.கணநாதனை, அணுகி அவரது இசைவை பெற்று, ஆய்வு சுருக்கம் உள்ளிட்டவைகளை ஒப்படைத்தேன். ஆனால், துறைத் தலைவர், இதற்கு மறுத்து விட்டார். உரிமையை தடுக்கும் விதத்தில், துறைத் தலைவர் செயல்பட்டு வருகிறார். பதிவாளருக்கு பல முறை விண்ணப்பித்தும் பதில் இல்லை.

இந்நிலையில், கடந்த டிசம்பரில், "பிஎச்.டி., யில் சேர அனுமதி இல்லை" என, பதில் வந்தது. இதற்கான விளக்கத்தை எழுத்து பூர்வமாக கேட்டேன். ஆனால், பல்கலை நிர்வாகம் தர மறுத்து விட்டது. ஆசிரியர்களின் பனிப்போரால், இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறேன், என்றார்.

பதிவாளர் மாணிக்கவாசகத்திடம் கேட்டபோது, "பத்ரகாளி, விண்ணப்பம் வழங்கும் போது, உடன் சேர்த்து கொடுத்த மனுவில், தலைவர்கள் குறித்து, தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருந்தார். இதனால், அவருக்கு இடம் வழங்கலாமா? என்பது குறித்து, ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைத்தோம். அக்குழு அளித்த அறிக்கையின்படி, மாணவியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை, தபால் மூலம் தெரியப்படுத்தினோம்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.