Pages

Wednesday, March 13, 2013

முன்னதாகவே வழங்கப்பட்ட பிளஸ் 1 வினாத்தாள்கள்: கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு

நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக பிளஸ் 1 வினாத்தாள் சப்ளை செய்யப்பட்டதை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் "திடீர்" சுறுசுறுப்பு அடைந்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தேர்வுகளுக்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமான நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், பறக்கும் படையினர், நிலைக் குழுக்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட அளவிலான பிளஸ் 1 தேர்வுகளும் கடந்த 5ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களுக்கு பதிலாக பெரும்பாலும் பிளஸ் 2 பாடங்களே நடத்தப்படுகின்றன. இதனால் வினாத் தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து பிளஸ் 1 தேர்வுகளுக்கு உரிய வினாத்தாள்களை மொத்தமாக பெற்று சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கு வசதியாக நல்லூர், ஊத்துமலை, வீராணம், நெட்டூர் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 5ம் தேதியே ஆங்கிலம் 2ம் தாள் வரை வினாத்தாள்கள் மொத்தமாக வழங்கப்பட்டது. இதனால் வினாத்தாள் அவுட் ஆக வாய்ப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் "சுறுசுறுப்பு&' அடைந்து இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட வினாத் தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து அலுவலர்கள் ஒரு சில பள்ளிகளுக்கு சென்று ஏற்கனவே மொத்தமாக வழங்கிய வினாத்தாள்களை மிகவும் சிரமத்திற்கு இடையே பெற்று சென்றனர்.

இதற்கிடையில் நேற்று வழக்கம் போல் பிளஸ் 1 ஆங்கில முதல் தாள் தேர்வு நடந்தது. இன்று (13ம் தேதி) ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்கி வினாத்தாள் "அவுட்&' வாய்ப்பு ஏற்படுத்திய வினாத்தாள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரிய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.