Pages

Thursday, March 14, 2013

தலைமை ஆசிரியர் நியமனம் பிரச்னை டி.இ.இ.ஓ அலுவலகத்தை முற்றுகை

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் பழனிராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது : நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதில் குளறுபடி நடந்துள்ளது. சீனியாரிட்டி இல்லாத ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையிட்டபோது சீனியாரிட்டியை கடைபிடிப்போம் எனக்கூறிவிட்டு தற்போது மாவட்ட தொடக்கக் கல்வி துறை இதனை மீறிவிட்டது. எனவே மாவட்டத் தொடக்கக்கல்வி துறை குளறுபடியை நீக்க வேண்டும் என்றனர். இப்போராட்டத்தால், நேற்று டி.இ.இ.ஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.