Pages

Thursday, March 14, 2013

பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் கலெக்டர் பேச்சு

பள்ளி வயது குழந்தைகளை கட் டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரன் பேசினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த குளமங்கலம் ஊராட்சியில் குளமங்கலம், பொன்னாப்பூர் கிழக்கு, மேற்கு, சின்ன பொன்னாப்பூர், நெய் வாசல், அரசப்பட்டு ஆகிய ஊராட்சிகள் பயனடையும் வகையில் மக்கள் நேர் காணல் முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் செய்தி, வேளாண், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் சிறு கண்காட்சிகள் நடத்தப்பட்டன. கலெக்டர் பாஸ்கரனிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 459 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் பாஸ்கரன் பேசுகையில், ‘மக்கள் நலன் காப்பதற்காக அரசு பல் வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கி அனைவரும் கல்வி கற்க வேண்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அரசின் நோக்கம் நிறைவேற ஒவ்வொருவரும் தங்களது பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் கல்வி கற்கச்செய்ய வேண் டும். குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியம்‘ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.