Pages

Tuesday, March 19, 2013

ஆசிரியர்கள் உடைக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆசிரியைகள் வாரத்திற்கு 3 நாட்கள் சீருடைஅணிந்து, கொண்டையிட்டு, குறைந்த "மேக்கப்" மற்றும் நகைகள் அணிந்து வரவேண்டும். ஆசிரியர்கள் முழு நீள சட்டை அணிந்து, "ஷூ" அணிந்து வரவேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இம்முடிவு, கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, கல்வி அலுவலர் மதியழகு ராஜா தலைமையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆசிரியைகள் சீருடை அணிந்து வரவேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் ஆசிரியர்களுக்கு எதிரானது. இந்த முடிவை கைவிட வேண்டும். அலுவல் சார்ந்த பல விஷயங்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் செயல்பாட்டிலும் கல்வி குழுத் தலைவரின் கணவர் அசோக் தலையிடுகிறார். அவர் மீது கமிஷனர் நந்தகோபால் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.