Pages

Tuesday, March 19, 2013

சிறந்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கல்

கிருஷ்ணகிரியில், 143 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்வியின் தரத்தை முன்னேற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்திய கணக்கெடுப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்காம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை வாசிப்புத்திறன் மற்றும் எழுதும் திறன் பெறாத, 13 ஆயிரம் குழந்தைகள் இருப்பது தெரியவந்ததது. கல்வி அலுவலர்களின் தொடர் பார்வை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டங்கள் காரணமாக தற்போது வாசிப்புதிறன் மற்றும் எழுதும் திறன் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை 8,000 குறைக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இரண்டு ஆயிரம் குழந்தைகளின் வாசிப்பு திறன் மேம்பட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வியின் தரத்தை முன்னேற்ற பள்ளி மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன், பள்ளி கட்டிடம், சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையலறை, பள்ளி வளாகம், வகுப்பறை தூய்மை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த அற்பணிப்பு போன்ற கூறுகளை ஆராய்ந்து சிறந்த பள்ளிகள், மூன்று அடுக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஒவ்வொருவருக்கும், ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது. பள்ளி கூறுகளின் அடிப்படையில், ஒவ்வொரு விரிவுரையாளரும் ஒரு சிறந்த பள்ளியை தேர்வு செய்தனர். இரண்டாம் கட்டமாக, முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், மூன்று பேர் கொண்ட குழு, ஐந்து பள்ளிகளை தேர்வு செய்தனர். மூன்றாம் கட்டமாக, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அடங்கிய குழுவானது, இரண்டாம் கடத்தில் தேர்வு செய்யப்பட்ட, ஐந்து பள்ளிகளை ஆய்வு செய்து அதில் இருந்து, ஒரு சிறந்த பள்ளியை தேர்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 1,427 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகல், 143 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு அந்த பள்ளிகளுக்கு ஆட்சியர் ராஜேஸ் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராசன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் துரைசாமி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.