Pages

Monday, March 4, 2013

போதை ஆசிரியர்களை போலீசில் பிடித்து கொடுத்த பள்ளி மாணவர்கள்

தாங்கள் பணியாற்றும் பிரபல பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு, அட்மிஷன் கிடைத்ததை, பள்ளியிலேயே மது அருந்தி ஆசிரியர்கள் கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம், கூச் பிகாரில் உள்ளது, பிரபல ஜென்கின்ஸ் பள்ளி. இங்கு பணியாற்றும், மூன்று ஆசிரியர்கள், அதே பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு, அட்மிஷன் பெற முயற்சி மேற்கொண்டனர். இதில், அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

இந்த மகிழ்ச்சியை, சக ஆசிரியர்கள் சிலர் மற்றும் பள்ளி ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாட தீர்மானித்தனர். அதற்கேற்ற வகையில், பிஜன் சாகா என்ற ஆசிரியர் பள்ளியிலேயே, மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு, இந்த மது விருந்து நடந்தது.

இதையறிந்த, பள்ளி மாணவர்கள், போலீசில் புகார் செய்தனர்; குடிபோதையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன், மது விருந்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று கூச்பிகார் நகரில், பேரணியும் நடத்தினர். இந்த சம்பவம், மேற்கு வங்க மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.