Pages

Thursday, March 14, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (மார்ச் 16) தொடங்குகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டாக்டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

சென்னை தியாகராய நகரில் உள்ள நவபாரத் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் எஸ்.பரமசிவன் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: டாக்டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு மையம், நவபாரத் மெட்ரிக் பள்ளி கட்டடம், 14-ஏ, சோலையப்பன் தெரு (பெரியார் சாலை பஸ் நிறுத்தம்), சென்னை-17.

பயிற்சியில் சேர விரும்புவோர் 9444982364, 9498080304, 044-28341456 என்ற எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். மேலும், daeeccchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் பதிவு செய்துகொள்ளலாம்.

2 comments:

  1. will i join for free tntet course?

    ReplyDelete
  2. will i join join for that tntet course from coming saturday

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.