Pages

Wednesday, March 27, 2013

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. தங்கவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் ஆகியோர், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 58 லட்சத்து 52 ஆயிரத்து 896 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களைவிட சுமார் 20 லட்சம் அதிகமாகும் என்றார்.

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 2011-12-ல் 6 லட்சத்து 9 ஆயிரத்து 915 ஆக இருந்தது. 2012-13-ல் இந்த எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிப்பதையே இது காட்டுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.