பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 11ம் தேதி இயற்பியல் தேர்வும், 14ம் தேதி கணிதத் தேர்வும் நடந்தன. இந்த இரு தேர்வுகளும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, கணித தேர்வில், கட்டாய கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாத நிலை இருந்ததாகவும், தெரிவித்தனர். கட்டாய கேள்வி இடம்பெற்ற பாடப் பகுதிகள், முதலில், நீக்கப்பட்ட பாடப் பகுதிகளாக இருந்தன. அதனால், அந்த பாடப் பகுதிகளை, ஆசிரியர்களும் நடத்தவில்லை. இடையில், நீக்கப்பட்ட பாடப் பகுதிகள், மீண்டும் சேர்க்கப்பட்டன.
இது தெரியாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து, கட்டாய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால், 16 மதிப்பெண்கள், மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டன. கடந்த ஆண்டை விட, கணிதத்தில், "சென்டம்&' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் எனவும், ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், சட்டசபையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,""பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகள் கடினமாக இருந்ததுடன், நீக்கப்பட்ட பாடப் பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட் டுள்ளன. எனவே, "போனஸ்" மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, வலியுறுத்தினார்.
இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், உடனடியாக பதில் அளிக்கவில்லை. அப்போது, சட்டசபையில், முதல்வர் இல்லை. எனவே, முதல்வரின் ஆலோசனையைப் பெற்று, போனஸ் மதிப்பெண்கள் தொடர்பாக, ஓரிரு நாளில், சட்டசபையில் அறிவிப்பு வரலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.