Pages

Tuesday, March 12, 2013

அரசு ஊழியர்களுக்கு சலுகை விலையில் மினி பிரிட்ஜ்

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அரசு அலுவலர்களுக்கு சலுகை விலையில் மினி பிரிட்ஜ் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய தபால்துறை, வருமானத்தை அதிகளவு ஈட்டும் வகையில் தங்ககாசு விற்பனை, சோலார் விளக்கு விற்பனை, மினி பிரிட்ஜ் விற்பனை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் இத்திட்டங்களில் அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மினி பிரிட்ஜ் விற்பனையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 8 கிலோ திறன் கொண்ட இந்த மினி பிரிட்ஜ், ஆன்லைன் வசதி கொண்ட அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்விலை ரூ.3,790. அரசு ஊழியர்களுக்கு சலுகையாக ரூ.300 குறைக்கப்பட்டு, ரூ.3,490க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை உள்ளது.  இதுதொடர்பாக சேலம் தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மினி பிரிட்ஜ் விலை, அரசு அலுவலர்களுக்கு ரூ.300 குறைக்கப்பட்டு ரூ.3,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய, மாநில அரசு அலுவலர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து சலுகை விலையில் மினி பிரிட்ஜ் வாங்கிக்கொள்ளலாம். மினி பிரிட்ஜ் தேவை என ஆன்லைனில் புக்கிங் செய்தால், 15 நாட்களுக்குள் வீட்டுக்கே பிரிட்ஜ் வந்து சேரும். இந்த சலுகையை பயன்படுத்தி, அரசு ஊழியர்கள் மினி பிரிட்ஜ் வாங்கிக்கொள்ளலாம்,‘‘ என்றனர்.

3 comments:

  1. ஆன்லைனில் புக்கிங் பண்ணுவது பற்றி சற்று விளக்கவும். website முகவரி கொடுக்கவும்.

    ReplyDelete
  2. ஆன்லைனில் புக்கிங் பண்ணுவது பற்றி சற்று விளக்கவும். website முகவரி கொடுக்கவும்.

    ReplyDelete
  3. Website address please...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.