Pages

Saturday, March 16, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இ. சுடலைமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

6-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும்; தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு முந்தைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும்; வேலைவாய்ப்பக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாதச் சந்தாத் தொகையை ரூ.50ஆக குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.