Pages

Monday, March 18, 2013

600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை உடனடியாக இரண்டாக பிரிக்க அரசு தேர்வுகள் துறை அவசர உத்தரவு

பிளஸ்   2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ மாண வியரும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 2020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தேர்வு துறை அறிவித்தபடி தபாலில் வருவது தாமதமாகியுள்ளது. குறிப்பாக சில மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தபால் நிலையங்களுக்கு இரவு நேரத்தில்தான் எடுத்து செல்கின்றனர். இதனால் அந்த கட்டுகள் தேர்வு துறைக்கு வந்து சேர்வதில் தாமதமாகி விடுகிறது.

இதையடுத்து 600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை நேற்று அவசர உத்தரவு போட்டுள்ளது. இன்றும் நாளையும் தேர்வு இல்லை என்பதால் இரண்டு நாளில் தேர்வு மையத்தை பிரித்து அந்த தகவல்களை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய நிலைக்கு மாவ ட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.