தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல், பார்லிமென்ட் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலர், ஈஸ்வரன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டத்தை, ஏற்கனவே முடிவு செய்தது போல், 2015க்குள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் என்பதை தவிர்த்து, தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளி கல்வித் துறையில், தனியார் பங்களிப்பு திட்டத்தையும், ஆசிரியர் தகுதி தேர்வையும் தவிர்க்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளத்தை, தற்போதைய அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். பழைய முறையில் பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல் பார்லிமென்ட் முன், தமிழகம் உட்பட, 19 மாநிலங்களிலிருந்து, 60 ஆயிரம் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு ஈஸ்வரன் கூறனார்.
BEST OF LUCK
ReplyDeleteeswaran sir one request ask about 10 th + D.t.ed +degree +B.ed teachers promotion sir
ReplyDelete