Pages

Thursday, March 14, 2013

தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு; ஆட்சியரிடம் மனு

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கோபாலகிருஷ்ணன், உதவி ஆசிரியராக சுந்தர்ராஜன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் பள்ளிக்கு குடி போதையில் வந்து பாடம் நடத்துவதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவிக்கு புகார் வந்தது. இது குறித்து விசா ரணை நடத்திய போது இரண்டு ஆசிரியரும், ஒருவர்மீது ஒருவர் புகார் கூறினர். இதை தொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி இருவரையும் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். அதன் படி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உப்புபாளையம் துவக்கப்பள்ளிக்கும், உதவி ஆசிரியர் சுந்தர்ராஜன் வீரக்குட்டை பள்ளிக்கும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கபிலக்குறிச்சியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் சிலர் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கபிலர்மலை பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுதருகிறார். பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். எனவே அவரை மீண்டும் இதே பள்ளிக்கு இடமாறுதல் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறுகை யில், ‘இரண்டு ஆசிரியர்களின் பணியும் திருப்திகரமாக இல்லை. குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி போதிக்க வேண்டும் என்ற நோக்கில் இருவரையும் இடமாறுதல் செய்துள்ளோம்’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.