Pages

Sunday, March 17, 2013

பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, முட்டை, பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்க, முதல்கட்டமாக, 21,990 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்து, மேலும், 14,130 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிக்காக, 360 கோடி ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.