Pages

Friday, March 22, 2013

உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.
இதில், உயிரியல் மற்றும் வரலாறு பாடங்களில் மட்டும் கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 36 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

இவர்களையும் சேர்த்து, தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் எண்ணிக்கை, 325 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.