Pages

Friday, March 15, 2013

பிளஸ் 2 கணிதம்: ஆசிரியர், மாணவர் சொல்வது என்ன

 "பிளஸ் 2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரவில்லை" என ஆசிரியர்கள், மாணவர்கள் கூறினர்.
மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண் பெற முடியும் வகையிலும், சுமாராக படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எளிது என்றாலும், அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்க முடியாத நிலையிலும் கேள்வித்தாள் அமைந்திருந்தது என்பது பொதுவான கருத்து.

கணித தேர்வு குறித்து மதுரை மாணவர்கள் கருத்து:

எஸ்.பெனாசீர் (எம்.ஏ.வி.எம். எம்., மேல்நிலை பள்ளி மாணவி): பகுதி 1ல், ஒரு மார்க் கேள்விகள் பெரும்பாலும் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ளவையே கேட்கப்பட்டிருந்தன. பகுதி 2ல், ஆறு மதிப்பெண் கேள்விகள், கொஞ்சம் கடினமாக இருந்தது.

வகை நுண் கணிதத்தின் பயன்பாடுகள் பகுதியில் இருந்த இடம் பெற்ற கேள்விகளை குறிப்பிடலாம். அதேபோல் பகுதி3ல், பத்து மார்க் கேள்விகளும் இதே வகையில் தான் அமைந்திருந்தன. அதிக மதிப்பெண் எடுக்கலாம். ஆனால், முழு மதிப்பெண் எடுப்பது சந்தேகம்.

எஸ்.கிருஷ்ணகுமார் (விருதுநகர் இந்து நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்): ஒரு மார்க் கேள்வி பகுதியில் பெரும்பாலும் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. 6 மார்க் பகுதியில் சில கேள்விகள் புத்தகத்திற்குள் இருந்து "ஒர்க் அவுட்" செய்து போடும் வடிவில் இடம்பெற்றிருந்தது.

கட்டாய வினாக்கள் பெரும்பாலும் கடின பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள் எளிமையாக அமைந்திருந்தன.

ஆர். கோமதி (ஆசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை): ஒரு மார்க் பகுதியில், 30 கேள்விகள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 10 கேள்விகள் பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டன.

பத்து மார்க் பகுதி, 1, 2, 3 வது பாடங்களில் இருந்து கேட்கப்பட்டவை எளிமையாகவும், 8வது பாடத்தில் இருந்து கேட்கப்பட்டவை சிறிது கடினமாகவும் இருந்தது. கட்டாய வினா பகுதியில் இடம்பெற்ற கேள்விகள், "ஆவரேஜ்" மாணவர்களுக்கு கடினம்.

காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் இத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.

விஸ்வநாத் ( ஆசிரியர், விருதுநகர் இந்து நாடார் மேல்நிலை பள்ளி ): பகுதி ஒன்றில், 24வது கேள்வியில் "லெஸ்தென்" குறிக்கு பதில் "கிரேட்டர் தென்" குறி இடம்பெற்றிருந்ததால், அதுகுறித்து குழப்பம் நீடிக்கிறது.

பகுதி 1ல், பாடங்கள் வாரியாக கேள்விகள் அடுத்தடுத்து இடம் பெறும் முறை மாற்றப்பட்டுள்ளது. முதல் பாடத்தில் இடம் பெற்ற கேள்விகளை அடுத்து, 8வது பாடத்தில் இருந்து கேள்விகள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் 24வது கேள்வி சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மார்க் பகுதியில், 41 முதல் 47 வரையுள்ள வினாக்கள் எளிதானவை. ஆனால் , 48, 49 வது கேள்விகள், "வகை நுண் கணிதத்தின் பயன்பாடு" பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே, விடையளிக்க முடியும்.பத்து மார்க் பகுதியில் கேள்வி 68ல், பெருக்கல் அட்டவணை செய்து காண்பிக்க தேவையில்லை.ஆனால், அதுதொடர்பாக வினாத்தாளில் மாணவர்களுக்கு அறிவுறுத்தவில்லை. பெரும்பாலான மாணவர்கள் தேவையில்லாமல் பெருக்கல் அட்டவணை செய்து, நேரம் வீணானதாக தெரிவித்தனர், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.