பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி இடங்கள் என்றபோதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில், இளைஞர்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக, வி.ஏ.ஓ., - இளநிலை உதவியாளர் போன்ற, அதிக காலி பணியிடங்கள் உள்ள குரூப்-4 தேர்வுகளில் மட்டும், லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர் பங்கேற்பர். ஆனால், சமீப காலமாக, இரட்டை இலக்கங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வுகளிலும், இளைஞர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர்.அந்த வரிசையில், குரூப்-1 நிலையில், வெறும், 25 பணியிடங்களை நிரப்புவதற்கு, நாளை, தமிழகம் முழுவதும், 33 மையங்களில், முதல்நிலைத் தேர்வுகள் நடக்கின்றன.
தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1 லட்சத்து, 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த அளவுக்கு, தேர்வர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, தேர்வாணையஅதிகாரிகளே எதிர்பார்க்காததால், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியையும், ஆர்வத்தையும் நினைத்து, வியப்பு அடைந்துள்ளனர். சென்னை நகரில் மட்டும், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு, புதிய தேர்வு முறையின்படி நடக்கிறது. முதல்நிலைத் தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதன்பின், முக்கிய தேர்வு, மூன்று தாள்களாக, தலா, 300 மதிப்பெண்கள் வீதம், 900 மதிப்பெண்களுக்கு நடக்கும். மூன்று தாள்களுமே, பொது அறிவை சோதிப்பதாக இருக்கும்.
இதைத் தொடர்ந்து, 120 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும். முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். நாளை நடக்கும் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு, 5,040 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.குரூப்-1 தேர்வில், தேர்வு பெற்றால், எதிர்காலத்தில், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி ஏற்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதிகாரம் உள்ள பதவிகளும், கை நிறைய சம்பளமும் நிறைந்த பணிகளாக, குரூப்-1 பதவிகள் உள்ளன. இதன் காரணமாகவே, இந்த தேர்வுக்கு, பட்டதாரிகள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.