மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட, ஐ.எம்.எஸ்., பணியிடங்கள் காலியாக இருப்பதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த ஏராளமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஷரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., உள்ளன. இவற்றுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவது, புதிய தனியார் பள்ளிகள் துவங்குவது, மாணவ, மாணவியரை அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பணிகளுக்காக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பணிகள் முடங்கியதால் சிக்கல் : மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின் கீழ், தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வீதம், 15 பணியிடங்கள் உள்ளன. இதில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்செல்வி, 2012 டிசம்பர், 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றனர்.
அப்பொறுப்புகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திராதேவி கூடுதலாக கவனித்து வருகிறார். தற்போது, ப்ளஸ் 2 செய்முறைத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு பணிகளில் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

அதே போல், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்யாகுமரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான, ஐ.எம்.எஸ்., ( மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்) பணியிடங்களும் காலியாக உள்ளன.இவற்றை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனித்து வருகின்றனர். இதனால் இயக்குனரகத்தில் மட்டுமின்றி, மாவட்டங்களிலும் மெட்ரிக் பள்ளிகள் குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு நர்ஷரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: இயக்குனர் அலுவலகத்தில், இயக்குனர், சூப்பிரண்டு உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
இதனால், 2,000 பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. அதில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு சிக்கல் இருப்பதோடு, அப்பள்ளி வாகனங்களுக்கு, எஃப்.சி., வாங்க முடியவில்லை. 2,000க்கு மேற்பட்ட பஸ்கள் பயன்படுத்த முடியாமல் நிற்கிறது. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக மாவட்டங்களில் பொறுப்பு வகிக்கும், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரு சில நாளில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால், வழக்கமான பணிகளை மேற்கொள்ளக்கூட தயக்கம் காட்டுகின்றனர். மேலும், பல தலைமை ஆசிரியர்கள் பள்ளி தேர்வு பணிகளால் அலுவலகத்துக்கு வருவதில்லை.இதனால் துவக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அனைத்து விதிமுறைகளும் உட்பட்டு உள்ள பள்ளிகளுக்கு கூட அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மெட்ரிக் பள்ளிஅலுவலக பணிகளில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இயக்குனர் பணியிடம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவும், அங்கீகாரம் தொடர்பான பணிகளை விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சூப்பர் அப்டேட்! மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த செந்தமிழ்செல்வி பணியில் இருந்து ஓய்வு பெற்று, 40 நாட்களுக்கு மேலாகியும், இயக்குனரகத்துக்கான வெப்சைட்டில், இன்னமும், இயக்குனர் என்பதன் கீழ், செந்தமிழ்செல்வியின் ஃபோட்டோவும், பெயரும் இருந்து வருகிறது. அரசு வெப்சைட் எவ்வளவு வேகமாக, "அப்டேட்' செய்யப்படுகிறது என்பதற்கு, இதுவே உதாரணம்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.