அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பிப்ரவரியில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டன.
பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் நடத்தப்பட்டால், மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கும் என, தலைமையாசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து, தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் நடக்க இருந்த பயிற்சிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.