Pages

Tuesday, February 5, 2013

அடிப்படையே ஆட்டம்! - Dinamani

தினமணி' அளித்துள்ள தகவல்கள் பெரும் கவலைக்குரிய விசயங்களாகும். நமது கல்வி கொள்கையில் ஒரு தெளிவான நிலை இல்லாததையே தலையங்கத்தின் புள்ளி விவரங்கள் உரைக்கின்றன. எங்கே தரமான கல்வி
புகட்டினால் மக்கள் விழித்துக் கொள்வார்களோ என்று அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்கிறார்கள் போலும். ரூ. 74000 கோடி செலவு செய்யப்படும் கல்வித்துறையின் லட்சணம் இப்பொழுது தெளிவாகிவிட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாது தரமான கல்வி புகட்ட ஓர் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்து தகுந்த சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டை கொண்டாடும் நமது நாடு , கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ''WE WANT THAT EDUCATION BY WHICH CHARACTER IS FORMED, STRENGTH OF MIND IS INCREASED, INTELLECT IS EXPANDED AND BY WHICH ONE CAN STAND ON ONE'S OWN FEET". அதாவது '' நன்னடத்தையையும், மனவலிமையை அதிகரிப்பதாகவும், அறிவை விரிவு படுத்துவதாகவும் கல்வி அமைவதின் மூலம் ஒருவன் தன சொந்தக்காலில் நிற்க முடியும் ''. இது நனவாக வேண்டும் .

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.