நமது கல்வியின் நிலை, உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, பரிதாபமாக இருந்தாலும், அதை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை. நமது கல்வி கொள்கையில், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்," என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு விழாவையொட்டி, சேலத்தில் கல்வியாளர்கள் மாநாடு நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:
நாட்டில் எவ்வளவோ துறவிகள் இருந்தாலும், மக்களால் மறக்க முடியாத துறவியாக விவேகானந்தர் உள்ளார். ஏனெனில் இவர் மட்டுமே மக்களை பற்றியும், நாட்டின் உயர்வை பற்றியும், கல்வியின் மேன்மை பற்றியும், இளைஞர்களின் சக்தியை பற்றியும் எளிமையாக புரிய வைத்தார்.
உலக அளவில், பி.ஏ.எஸ்.ஐ., சார்பில், 73 நாடுகளில் பள்ளிக் கல்வி எப்படி உள்ளது என, புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. இப்படி நமது கல்வியின் நிலை, உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, பரிதாபமாக இருந்தாலும், அதை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை. நம் கல்வி கொள்கையில், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.