Pages

Thursday, February 14, 2013

ஆசிரியர் மன்றம் போராட்டம்

ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை, பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிடில், ஜூன் 9ம் தேதி முதல், தொடர் போராட்டங்கள் நடக்கும்' என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.
சங்க பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பணப்பயன் தரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதிய முறையை கைவிடுதல் உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள், தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை எனில், ஜூன் 9ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், பேரணி நடத்துவதுடன், தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.