தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.அது போல் 2010-11 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இப்படி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் 2012-2013-ம் கல்வியாண்டில் 6,7,8 வகுப்புக்களுடன் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குகின்றன.எனவே 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த தொடக்க கல்வி இயக்குநர் கோரியுள்ளார். இதனையடுத்து 2010-11 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 218 தொடக்கப்பள்ளிகள் 2012-13ம் கல்வியாண்டில் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குவதால் அப்பள்ளிகளில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தப்படுகிறது.
அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும்,பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகிய பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின் படி,பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.