Pages

Tuesday, February 5, 2013

ஜனவரி மாத ஊதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் வழங்காததால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டத் தலைவர் ஆர். முருகன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 80 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 270
ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய விவரம் அந்தந்த தலைமையாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு, உதவி தொடக்கக் கல்வி அலுவலகப் பணியாளர்களால் தொகுக்கப்படும்.

பின்னர், கருவூலத்துக்கு அனுப்பி இசிஎஸ் முறையில் ஒவ்வொரு மாத இறுதி நாளில் ஊதியம் பெற்று வழங்கப்பட வேண்டும்.

ஆனால், சங்ககிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வாசுகி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் இந்தப் பணியை முறையாக செய்யாததால் ஜனவரி மாத ஊதியம், பொங்கல் போனஸ் உள்ளிட்டவற்றை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதியம் பெற்றுத் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.