Pages

Tuesday, February 5, 2013

அகஇ - தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான 10 நாள் வட்டார அளவிலான NON - RESIDENTIAL பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்து உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் NON - RESIDENTIAL வட்டார அளவிலான பயிற்சி நேற்று துவங்கியது. இப்பயிற்சியானது மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பயிற்சி இன்று 05.02.2013 முதல்
தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இப்பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே RMSA சார்பில் நடத்தப்பட்ட 9 மற்றும் 10ஆம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 4 நாட்கள் பயிற்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.