Pages

Friday, February 15, 2013

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட வட்டி அதிகரிப்பு

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது.
அதாவது, அந்தாண்டிற்கு பின் சேர்ந்தவர்கள் அனைவரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகையை அரசும் வழங்கி, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

1 comment:

  1. அப்படி என்றால் CPSதிட்டம் ஒய்வூதிய திட்டமாக மாற்றப்படதா?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.