அகில இந்திய தொழிற் சங்கங்கள், இம்மாதம், 20, 21ம் தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்க வேண்டும்' என, மத்திய தொழிற்சங்கங்கள், மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - எல்.பி.எப்., - எச்.எம்.எஸ்., -
ஐ.என்.டி.யு.சி., - பி.எம்.எஸ்., உள்ளிட்ட, 11 மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை, மாதத்துக்கு, 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம், 20, 21ம் தேதிகளில், பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.கட்சி வேறுபாடுகளைக் கடந்து, காங்கிரஸ், பா.ஜ., கம்யூனிஸ்ட்கள், தி.மு.க., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து, 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.வேலை நிறுத்தத்துக்கான நாள் நெருங்கும் இந்த நிலையில், கோரிக்கைகளை, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.
"வேலை நிறுத்தத்தை கை விடுங்கள்' என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழிற்சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரின் வேண்டுகோளை ஏற்க முடியாது என அறிவித்து, திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.வேலைநிறுத்தம், தமிழகத்தில் வெற்றி பெற, அண்ணா தொழிற்சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
தொழிலாளர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி நடக்கும், வேலை நிறுத்தத்துக்கு, ஆதரவு தேவை என, ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மீண்டும் அக்கோரிக்கையை முன் வைக்கிறோம்.இவ்வாறு, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.